இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் சுழற்சி முறையில் பணியிட மாறுதல் அமலாக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் சார்பில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததால் சிஐடி மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன் தலைமையில் டாஸ்மாக் மாவட்ட பொது மேலாளர் வசந்த ராஜை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனி, பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.