tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு வாக்கு கேட்டு செங்கல்பட்டு நகரப்பகுதியில் புதனன்று (ஏப்.3) திமுக நகரச் செயலாளர் ச.நரேந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், விசிக மாவட்டச் செயலாளர் செங்கை தமிழரசன், சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.வேலன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், நகரச் செயலாளர்கள் அன்பு, வேதகிரி, திமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் க.அன்புச் செல்வன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.


தேர்தல் ஆணையத்தின் சார்பில் “தேர்தல் 2019 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய விழிப்புணர்வு கையேட்டினை” தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் சென்னை கிண்டியில் புதனன்று (ஏப். 3) வெளியிட்டனர். இதில் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


சென்னை மவுலிவாக்கத்தில் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் சார்பில் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் குன்றத்தூர் போரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.