tamilnadu

img

ஜனநாயகம் காக்க மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை, ஏப்.17-ஜனநாயகத்தை காப் பாற்ற மதச் சார்பற்ற கூட் டணி ஆட்சி அமைய வேண் டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் பாஜக ஆட்சியில் அதிகரித்திருப்பதால் புதிதாக தொழில், சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உருவாக்கப்படும். மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தற்போது காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்கள் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதி கூறுகிறது.இந்தியாவின் முதுகெலும்பாக 70 சதவீத மக்கள் சார்ந்திருக்கிற விவசாயத்திற்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாக ரத்து செய்யப் படும் என்பன உள்பட பல் வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள் ளன.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்கிற வகையில் அமைந்திருக்கிறது. ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் சர்வாதி காரியாக ஆட்சி நடத்தி வருகிறார். ஜனநாயகத் தூண்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக உணர்வே இல்லாமல் செயல்படுகிற நரேந்திர மோடி ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த ஆட் சியை மீண்டும் அமைக்க வேண்டிய பொறுப்பு வாக் காளர்களுக்கு இருக்கிறது.அதை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்கால பிரதமராக பொறுப்பேற்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்திருக்கிறார். அதே போல, தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோத ஆட்சிகளை அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட வேண்டிய நாள் ஏப்ரல் 18. தமிழக வாக்காளப் பெருமக்கள் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொள்வதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.