சென்னை, அக். 7 - தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் காலாண்டு தேர்வு முடி வடைந்த நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காலாண்டு விடுமுறை மிகவும் குறைவாக இருப்பதாகவும், காலாண்டு தேர்வுத் தாள் திருத்தும் பணிகளுக்குக் கூட இடைவெளி இல்லை என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, பள்ளிகள் திறப்பை அக்டோபர் 7-ஆம் தேதிக்கு மாற்றி பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை யுடன் காலாண்டு விடுமுறை முடி வடைந்ததால், திங்களன்று (அக்.7) காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ - மாணவியர் மிகுந்த உற் சாகத்துடன் பள்ளிகளுக்குச்சென்ற னர். திருவண்ணாமலை மாவட்டத் தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தவாசி பள்ளி யில் நேரில் ஆய்வு மேற்கொண் டார்.
அங்கு சத்துணவு தளத்தை பரிசோதித்த அவர், மாணவர்களின் வாசிப்புத் திறனையும் ஆய்வு செய்து, இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்கினார்.
முதல் நாளிலேயே இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்களை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடு களை பள்ளிக்கல்வித் துறை செய்துள்ளது.