சென்னை:
புதிய தேசிய கல்விக் கொள்கை கூட்டத்தை புறக்கணித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கல்வி இயக்குனர்
புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி 3, 5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குழந்தைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்க மும்மொழிக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.மத்திய அரசின் குலக்கல்வித் திட்டத்தை திணிக்க பார்க்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் மத்திய அரசு அழைப்பு விடுத்த தேசிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தை புறக்கணித்த தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு தெரிவிப்பதுடன், மாநில உரிமை காக்க கல்வி உரிமையை மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.
இயக்குனர் தேவை!
தமிழ் நாட்டில் பள்ளிக் கல்வி இயக்குநர் என்ற பதவியை ரத்து செய்யப்படுவதாகவும் இனி அந்த பணிக்கான பொறுப்புகளை பள்ளிக் கல்வி ஆணையர்களே கையாளுவார் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு எடுத்துள்ள இந்த முடிவை நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு ஆங்கிலேயர் காலத்திலிருந்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தது பள்ளிக் கல்வி இயக்ககம் தான்.
முதல்வர் தலையிட வேண்டும்...
கல்வி வளர்ச்சியை மேம்படுத்தவும் கல்வித்தரத்தை உயர்த்தவும் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் சீர்திருத்தம் செய்வதில் தவறில்லை. கடந்த காலங்களில் அவ்வாறு செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் தான் கல்வி வளர்ச்சிக்கு வகை செய்தன .ஆனால் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் ஆணையராக மாற்றி அதைக் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி டம் ஒப்படைப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையில் நடவடிக்கையைசிதைத்துவிடும்.பள்ளிக்கல்வித்துறையில் சுமார் 100 ஆண்டுகளாக இருந்து வரும் கல்விக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை பறிமுதல் செய்யும் அநீதியை முதல்வர் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்
இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நிர்வாகத் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது.பள்ளிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டவர்கள் நேர்மையாகவும் திறமையாகவும் இருப்பவர்கள் தான். ஆனால், பள்ளிக் கல்வியை நிர்வாகிக்க போதாது. பள்ளிக்கல்வி இயக்குனர் என்பது அதிகாரம் சார்ந்த பணி அல்ல மாறாக அனுபவம் சார்ந்த பணியாகும்.
பள்ளிக் கல்வி இயக்குனர் பதவி மட்டுமின்றி மெட்ரிக் பள்ளி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், முறைசாரா கல்வி இயக்குனர், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அகற்றப்பட்டு அனைவரும் கையாண்டு வந்த பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு செயல்பட்டால் அதை விட பெரிய அபத்தம் இருக்க முடியாது.பள்ளிக் கல்வித்துறை முந்தைய ஆட்சியில் ஆணையர் நியமனம் செய்யப்பட்ட போது அதை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் எதிர்த்தது.எனவே, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கல்வித்துறையில் உருவாக்கப்பட்ட ஆணையர் பதவியை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பணியிடம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு சங்கர் தெரிவித்துள்ளார்.