tamilnadu

img

சட்டத்தை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் சாம்சங்!

சென்னை, செப். 11 - தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமையை மதிக்காமல் ‘சாம்சங்’ நிறுவனம் சண்டித்த னத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு தலையிட்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன் தமது அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:

வன்முறையைத் தூண்டும்  ‘சாங்சங்’ நிறுவனம்!

சங்கம் வைக்கும் உரிமைக்காக ‘சாம்சங்’ தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள உரிமை. ஒரு வெளிநாட்டு நிறு வனம் இந்திய சட்டத்தை மீறுவதை ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. 

சங்கத்திற்கான தேவையை ‘சாம்சங்’ தொழிலாளர்கள் உணர்ந் ததே 8 மணி நேர வேலையை உத்தர வாதப்படுத்துவதற்காகத்தான். ஓய்வு கிடையாது, விடுமுறை எடுக்க முடியாது, எதிர்த்துக் கேட்டால் தனி அறை யில் பூட்டிவைப்பது, எதிர்த்து கேட்பவர்களை  ஒடுக்கினால் எல்லாம் சரி யாகி விடும் என்று வன் முறையை தூண்டுவது என அனைத்து சட்ட விரோத  நடவடிக்கை களிலும் ‘சாம்சங்’ நிறுவனம் ஈடு பட்டிருக்கிறது. 

கூட்டுச் சேர்ந்து மிரட்டும் காவல்துறை!

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தொழிலாளர் நலத்து றையும், காவல்துறையும் சாம்சங் நிறுவனத்தின் இன்னொரு துறைபோல நடந்து கொள்வது எந்த வகையிலும் ஏற்க முடியாது. 

போராடும் தொழிலாளிகள் எந்த பொது இடத்திலும் கூடக் கூடாது என மிரட்டல் விடுக்கும் காவல்துறை அருகில் உள்ள கிராமங்களில் இடமே கொடுக்கக் கூடாது என்றும் மிரட்டியிருக்கிறது. 2 கி.மீ.க்கு அப்பால் ஒரு தனியார் இடத்தில் தொழிலாளர்கள் கூடிஅமைதியாக போராட்டத்தில் ஈடுபட் டால் அந்த இடத்தின் உரிமையாளரை மிரட்டு கிறது காவல்துறை. பந்தல் போடுவதற்கு வருபவர் களை மிரட்டி அனுப்பிய தால் வேறுவழியின்றி பந்தல் பொருட்கள் அனைத்தையும் தொழி லாளர்களே விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

சங்கப் பதிவை நிறுத்தி வைத்த தொழிலாளர் துறை!

தொழிலாளர் நலத்துறை சங்கப்பதிவை ஏற்காமலும், மறுக்கா மலும் நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் வேறு எந்த இடத்திலும் வாடகை கட்டிட த்தில் தொழிற்சங்கம் இயங்கினால் வாடகை ஒப்பந்தம் கேட்ட வரலாறே இல்லை. 

ஆனால், சாம்சங் தொழிற் சாலைக்காக அப்படியொரு கேள்வி யை கேட்டிருக்கிறது தொழிலா ளர் நலத்துறை. தொழிலாளர்துறை யின் சில அதிகாரிகளே தொழிலாளர் களை மிரட்டுவதாகவும் தெரிகிறது. 

இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 

போராடும் தொழிலாளர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு தனது முழு ஆதரவை தெரி வித்துக் கொள்கிறது.

அரசு தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும்!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சாம்சங் நிறுவனத்தை கண்டிப்பதோடு, தொழிலாளர் நலத்துறையும், காவல்துறையும் தமிழ்நாடு அரசின் துறைகளைப் போல நடந்து கொள்ள வேண்டும், சட்டத்தை பின்பற்ற வேண்டுமென் றும் தமிழ்நாடு அரசு போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று வதற்கு உரிய முறையில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்.