சென்னை, அக். 7 - முதலமைச்சர் உத்தரவின் பேரில், அமைச்சர்கள் முன்னின்று ஏற்பாடு செய்திருந்த 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும், ‘சாம்சங்’ நிறு வனத்தின் பிடிவாதத்தால் மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரத்தில் ‘சாம்சங் இந்தியா’ நிறு வனம், பிரிட்ஜ், டி.வி., வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உப யோகபொருட்களைத் தயாரித்து வருகிறது.
இங்கு பணியாற்றும் 1500-க்கும் மேற்பட்டோர் தங்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு எதி ராகவும், தொழிற்சங்கம் அமைப்ப தற்கான உரிமைக்காகவும் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் துறை முன்னிலை யில் நடைபெற்ற 5 கட்டப் பேச்சு வார்த்தையிலும் தீர்வு எட்டப்பட வில்லை.
மாறாக, போராடும் தொழி லாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையென்றால் சம்பளம் பிடித்தம், பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் மிரட்டல் விடுத்து வரு கிறது. அந்த மிரட்டலுக்கு அஞ்சா மல் தொழிலாளர்கள் உறுதியுடன் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்)- லிபரேசன் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர்.
இதனிடையே, ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தர விட்டதை தொடர்ந்து தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஞாயிற்றுக்கிழமை (அக்.7) அன்று, சாம்சங் நிறுவனத்தை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்துப் பேச்சு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவித்திருந்தபடி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறை ஆணை யர் கமலக்கண்ணன், இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் திங்களன்று (அக்.7) சாம்சங் நிறுவனம் - ஊழியர்கள் இடையே 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால், இந்தமுறையும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை சாம்சங் நிறு வனம் ஏற்கவில்லை. இதனால், 6-ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாமலேயே முடி வடைந்தது.
இதனிடையே, அமைச்சர்கள் குழு தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.