tamilnadu

img

ஒன்றிய அரசின் தலையீட்டால் சாகித்ய அகாடமி விருது ஒத்திவைப்பு!

ஒன்றிய அரசின் தலையீட்டால் சாகித்ய அகாடமி விருது தொடர்பான அறிவிப்புகள் ஒத்திவைக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துவருகிறது.
சாகித்ய அகாடமி விருதுக்காக 24 மொழிகளில் பெயர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில் நடுவர் குழுக்கள் பரிந்துரைத்த அனைத்து பெயர்களும் நிர்வாகக் குழுவால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2025–26 ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) சுட்டிக்காட்டிய ஒன்றிய கலாச்சார அமைச்சகம், விருதுகளுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அமைச்சக ஒப்புதல் பெறும் வரை, முன்அனுமதி இன்றி எந்த விருது அறிவிப்பும் வெளியிடக் கூடாது என அகாடமிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் கடைசி நிமிடத்தில் விருதுக்கான அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்கள், இலக்கியவாதிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.