கடலூர், ஜூன் 27- கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூர் லாரன்ஸ் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு சாலை வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்எம்எஸ் அலுவ லகம் முன்பு நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை யில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு தின சரி 300க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பிரசவமும் பார்க்கப் படுகிறது. ஆம்புலன்ஸ், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் வந்து கொண்டிருந்த சாலையை ரயில்வே நிர்வா கம் சில மாதங்களுக்கு முன்பு அடைத்து விட்டது. எனவே, பிரதான சாலையில் வாகனம் செல்வதற்கு புதிய சாலை அமைக்க வேண்டும். மாவட்டத் தலைநகரமான திருப்பாதி ரிப்புலியூர் ரயில் நிலையத்தை கடலூர் திருப் பாதிரிப்புலியூர் என பெயர் மாற்றம் செய்து பயணிகளை குழப்ப வேண்டாம், திருப்பாதிரிப் புலியூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி கள் மற்றும் உழவன், ராமேஸ்வரம் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் – புதுவை - சென்னை இருப்புப் பாதை திட்டத்தை உருவாக்க வேண்டும், மயிலாடு துறையில் இருந்து கோவை, மைசூர் செல்லும் ரயில்கள் கடலூர் முதுநகர் வரை நீட்டிக்க வேண்டும், விழுப்புரம் – கடலூர் - மயிலாடு துறை பயணிகள் ரயிலை கூடுதலாக இயக்க வேண்டும், திருச்செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருத வாணன், வி.சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.பாஸ்கரன், ஜே. ராஜேஷ்கண்ணன், எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆர்.ஆளவந்தார், ஆர்.தமிழரசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் நகரக் குழு உறுப்பினர்கள் கே.ஸ்டாலின், என்.பால்கி, டி.செந்தில்குமார், ஆர்.ஆனந்த், டி.எஸ்.தமிழ்மணி வி.திருமுருகன், எஸ்.ஏ. பக்கிரான், ஏ.அல்லாபிச்சை, ஆர்.பூபதி, சே.கருணாகரன், எம்.மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.