பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வுதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் செவ்வாயன்று (நவ. 19) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும், 2002 நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், 2010 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரசேகரன், எஸ்பிஐ வங்கிஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சரவணமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பெஃபி அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன், எஸ்பிஐ அதிகாரிகள் சங்க மண்டலச் செயலாளர் ஏ.வி.ஜோசப், ஓய்வூதியர் அமைப்புகளின் தலைவர்கள் பாலசுப்பிரமணியன் (பரோடாவங்கி), ஈஸ்வரன் (பேங்க் ஆப் இந்தியா), கருணாகரன் (ஐஓபி), சந்துரு (இந்தியன் வங்கி) பேசினர்.