பொதுவுடமை சிந்தனை சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் பிறந்த நாளான செவ்வாயன்று (பிப்.18) நொச்சிக்குப்பத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஜெ.அன்புரோஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் எஸ்.ஜெயசங்கரன், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் எஸ்.குமார், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.பரமசிவன் உள்ளிட்டோர் பேசினர்.