அண்ணாமலைப்பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை
சிதம்பரம், பிப். 14- தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சட்ட பேரவையில் தாக்கல் செய்தார் இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்க லைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும். மேலும் இது கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி யாக செயல்படும் என்று அறி வித்துள்ளார். இதற்கு சிதம்பரம் பகுதி மக்கள் பல்கலைக்கழக ஆசிரி யர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஊழியர் சங்கத்தினர் வரவேற்றுள்ள னர். இதுகுறித்து கடந்த 2012ஆம் ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பால கிருஷ்ணன் கூறுகையில், பல்கலைக் கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என்று அப்போதிருந்த பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதை அரசு முழுகட்டுபாட்டில் எடுக்க வேண்டும் என்று எனது தலைமை யில் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டமும் நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று மனு கொடுத்து வலியுறுத்தி யதின் பேரிலும், சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்பியதன் அடிப்படை யிலும் இந்த பல்கலைக்கழகத்தை அரசு 2013இல் முழு கட்டுபாட்டில் எடுத்தது.
அதே நேரத்தில் இதனுடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை யும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் பதிவு செய்தி ருந்தேன். அதனையொட்டி கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல் லூரியாக மாற்றுவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மருத்துவகல் லூரி மருத்துவமனை சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது அரசு மாவட்ட மருத்துவக்கல்லூரியாக அறி வித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை தற்போதுள்ள நிலையிலே நடத்தாமல் பல்நோக்கு மருத்துவ மனையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
012ஆம் ஆண்டுகளில் அண்ணா மலைப் பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த மதியழகன் கூறுகையில், பல்கலைக்கழகத்தை சீர்படுத்த எடுத்த கோரிக்கையில் இதுவும் ஒன்று. இதுகுறித்து சட்டமன்றத்தில் அப்போதைய எம்எல்ஏ பால கிருஷ்ணன் பேசியுள்ளார். பின்னர் அரசு பல்கலைக்கழகத்தை முழு கட்டுபாட்டில் எடுத்த பிறகு பல்க லைக்கழக சிறப்பு அதிகாரியாக நிய மிக்கப்பட்ட தமிழக அரசின் முதன்மை ஆட்சியர் ஷீவ்தாஸ் மீனாவிடம் பல்க லைக்கழக நிதி சிக்கலை சரிசெய்ய இந்த கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில் தற்போது இதனை மாவட்ட மருத்துவக் கல் லூரியாக அறிவித்துள்ளது வரவேற் கத்தக்கது.. இங்கு பயிலும் மாண வர்களுக்கு மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் என்ன கட்டணமோ அதே கட்டணம் இனிமேல் வசூலிக் கப்படும். அரசின் மற்ற மருத்துவக் கல்லூரியில் இருந்து அனைத்து வித மான மருத்துவர்கள் மற்றும் ஊழி யர்கள் பணிமாறுதல் பெறுவார்கள். இந்நிலையில் இபோதுள்ள அனைத்து குறைகளையும் சரிசெய்து எந்த குறைகளும் இல்லா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போல் பல்நோக்கு வசதிகள் கொண்ட மருத்துவக் கல்லூரியாக செயல் பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.