tamilnadu

திருப்போரூரில் எரிவாயு குழாய் சேதம் சீரமைப்பு

திருப்போரூரில் எரிவாயு குழாய் சேதம் சீரமைப்பு

திருப்போரூர், நவ.4- காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வார்டு எண். 1, காளவாக்கத்தில், திங்க் கியாஸ் நிறுவனம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்வதற்காக பூமிக்கு அடியில் குழாய்களை பதித்துள்ளது. இந்நிறுவனம் குழாய்கள் பதித்துள்ள பகுதிகளில் அது குறித்து எச்சரிக்கை பலகைகளையும் வைத்துள்ளது. அதை கவனத்தில் கொள்ளாமல் வடிகால் கட்டுமானப் பணிக்காக மூன்றாம் தரப்பினரால் ஜெசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது இந்நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் வினியோக குழாயில் சேதம் ஏற்பட்டு அதில் இருந்து கியாஸ் வெளியேறியது. இது குறித்து தகவல் அறிந்த திங்க் கியாஸ் நிறுவன ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று அதை உடனடியாக சரி செய்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் தற்போது சீரான கியாஸ் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.