tamilnadu

img

ரேசன்கடையில் இன்றும் நிவாரண நிதி பெறலாம்....

சென்னை:
தமிழகம் முழுவதும் சனிக்கிழமையன்று முதல் ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் விநியோகிக்கப்பட்டது.

மொத்தம் 2 கோடியே 7 லட்சத்து66 ஆயிரத்து 950 அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு இந்ததொகை வழங்கப்பட உள்ளது.டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி-நேரங்களில் சென்று வாங்க முடியாதவர்கள் மே 18 ஆம் தேதிக்கு பிறகு ரேசன் கடைக்கு சென்று வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கான ஞாயிற்றுகிழமையன்று ரேசன் கடைகளில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்ட தேதியில் டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை கொரோனா நிவாரண நிதி பெறலாம்என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.