உலக சுற்றுச்சூழல் தினத்தன்று (ஜூன் 5-ஆம் தேதி) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கிரீன் கிளப் சார்பில் ஏராளமான இளைஞர்கள் மதுரை மாநகரில் நெகிழிப் பொருட்கள் மற்றும் பயன்பாடற்ற பொருட்களைச் சேகரித்தனர். இதன் மூலம் ரூ.80 ஆயிரம் கிடைத்துள்ளது. இந்தத் தொகை தமிழக முதல்வரின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு வழங்கப்பட்டது. மதுரை ஆட்சியர் அனீஷ்சேகரிடம் வாலிபர் மாவட்டத் தலைவர் பி.கோபிநாத், செயலாளர் த.செல்வா, பொருளாளர் அ. பாவேல் சிந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சரண், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் க.பாலமுருகன், செயலாளர் எஸ்.வேல்தேவா ஆகியோர் வழங்கினர்.