கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மணிக்கு 13 கி.மீ-இல் இருந்து 10 கி.மீ ஆக குறைந்தது. நாகைக்கு தென்கிழக்கே 350 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 450 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இந்த நிலையில், இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்காக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.