states

img

மணிப்பூர்: மேலும் 2 நாட்களுக்கு இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணமாக மேலும் 2 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து மதிப்பாய்வு செய்த பிறகு மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், காக்சிங், பிஷ்னுபூர், தெளபால், சூரசந்த்பூர், ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் அடித்த இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதுவரை மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், பொதுமக்கள் வசதிக்காக மருத்துவ வசதிகள், கல்வி நிலையங்கள் மற்றும் இதர அரசு அலுவலங்களில் மட்டும் இணைய சேவையை பயன்படுத்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.