நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிகால் கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளன்று, அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து முதல் நாளில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரௌபதி மும்மு ஆற்றிய உரையில், சமத்துவம், மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஜனாதிபதியின் உரை மீது விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு டி.ஆர்.பாலு எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார்.
இதை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்றும் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை 11 மணிக்கு இரு அவைகளும் நடைபெற உள்ளது.
முன்னதாக எதிர்க்கட்சிகள் அளித்த 18 ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்களும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.