states

img

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,நவம்பர்.27- பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சாதி அடிப்படையிலான குலத்தொழில் முறையை வலுப்படுத்தும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என ஒன்றிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சமூக நீதி அடிப்படையில் கைவினைஞர்களுக்கு அதிகாரம் தரும் வகையில் தமிழ்நாட்டுக்கு என விரிவான திட்டம் உருவாக்க முடிவு. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டம், சாதி, குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழு ஆதரவு அளிக்கும் எனவும் முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.