ஏழு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு, NDTV நிறுவனர்களுக்கு எதிரான வழக்கை சிபிஐ முடித்து வைத்தது. ஆதாரம் இல்லாததால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோரை விடுவித்தது.
பலர் பிரணாய் ராயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
"சாதாரண வணிக பரிவர்த்தனை மட்டுமே அவர்கள் மேற்கொண்டுள்ளனர். குற்றங்களோ, சட்ட மீறுதல்களோ நடைபெறவில்லை" என்று சிபிஐ தனது அறிக்கையில் கூறுகிறது.
எந்த வழக்கும் இல்லை என்றால், NDTV நிறுவனர்கள் ஏன் ஏழு ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டனர்?
அமலாக்கத்துறை, 2022இல் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோரை 20 முறை வரவழைத்து விசாரித்தது. இறுதியாக, சிபிஐ, அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட அதே நிறுவனத்தின் மூலம் NDTV-ஐ அதானி குழுமம் வாங்கியது.
- பத்திரிகையாளர் அரவிந்த குணசேகர்