சுகாதாரத்துறையில் வாரிசுதாரர்களை கொண்டு பணி நியமனம் செய்க
புதுச்சேரி,பிப்.23- சுகாதாரத்துறையில் வாரிசுதாரர்கள் கொண்டு பணி நியமனம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறு த்தியுள்ளது. இது குறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் அரசின் அனைத்து துறைக ளிலும் வாரிசுதாரர் பணிக்கு விண்ணப்பித்து உள்ள அனைவருக்கும் ஒரு முறை தளர்வு அளித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று சட்டப்பேரவையில் வாக்குறுதி அளித்தார்.இந்த வாக்குறுதி அளித்து ஒராண்டு கடந்த நிலையில், முதலமைச்சரின் வாக்குறுதி என்பது சுகாதாரத் துறையில் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கான சேவைகள் உயிரை பணயம் வைத்து துப்புரவு பணியாற்றி இறந்த 13 சுகாதாரத்துறை ஊழியர்கள் வாரிசுக ளுக்கு கூட பணி நியமனம் வழங்கப்பட வில்லை. மேலும் புதுச்சேரி சுகாதாரத்துறை யில்700 க்கும் மேற்பட்ட குரூப் ‘ சி ‘ மற்றும் குரூப் ‘ டி ‘ பணியிடங்கள் காலியாக உள்ளன. முதலமைச்சர் அவர்களின் வாக்குறுதி அடிப்படையில், உள்ளாட்சி துறையில், உழவர்கரை நகராட்சியில் 63 நபர்களுக் கும், காரைக்கால் நகராட்சியில் 22 நபர்களு க்கும் ஒரு முறை தளர்வு அளித்து வாரிசு தாரர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது. அதே அடிப்படையில் புதுச்சேரி நகராட்சியில் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் அனைத்து வாரிசுதாரர்களுக்கு ஒரு முறை தளர்வு அளித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சியில், துப்புரவு உள்ளிட்ட தொற்று நோய் பணிகளை மேற்கொண்டு வரும் நகராட்சி ஊழியர்கள் எளிதில் நோய்வாய்ப்படவும், அதன் காரணமாக இளம் வயதிலேயே உயிரிழக்கும் அபாயம் உள்ளதன் காரணமாக நகராட்சியில் வாரிசு தாரர் நியமன விதிகளில் தளர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் ஏனெனில், கொரோனா பெருந்தொற்று மட்டுமின்றி பல்வேறு நோய்த்தொற்று களுக்கு ஆளாகி, அதன் காரணமாக இளம் வயதிலேயே உயிரிழக்கும் அபாயம் நிறைந்த சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் குடும்பங்களுக்கு இந்த சலுகை மிகவும் அவசியம் என்பதை மறுக்க முடியாது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக கருணை அடிப்படையில் வழங்கப்படும் வாரிசுதாரர் பணி நியமனத்தை எதிர்பார்த்து காத்தி ருக்கும் சுகாதாரத்துறை வாரிசுதாரர் அனை வருக்கும் சட்டமன்ற வாக்குறுதி அடிப்படை யில், சுகாதாரத் துறையில் ஒரு முறை தளர்வு அளித்து வாரிசுதாரர் பணி நிய மனம் செய்ய ஆவண செய்திடவும். தற்போது இயக்குநர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தொடர் காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டு வரும், வாரிசுதாரர்கள் அழைத்து பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.