தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
மதுராந்தகம், அக். 18- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தலித் அல்லாத வர்களிடம் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஆத்தூர், ஒரத்தூர், விநாயகநல்லூர், திருப்புலி வனம், காரனை, சிறுதாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்கள் குறித்து ஏற்கனவே வருவாய் நிர்வா கம் அளித்த உத்தரவாதத்தின் அடிப் படையில் பஞ்சமி நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பஞ்சமி நிலங்களை மறு ஒப்படைப்பு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு, விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பெண்கள் இயற்கை விவசாயக் குழு கூட்ட மைப்பு சார்பில் மதுராந்தகம் தேரடி வீதியில் வெள்ளியன்று (அக். 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நில உரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தேவ.ருக்மாங்கதன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை விளக்கி முன்னணியின் மாவட்டச் செயலாளா் கே.வாசு தேவன், மாவட்டத் தலைவர் ப.பாரதி அண்ணா, நில உரிமை கூட்டமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.தயாளன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. மோகனன், விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.கோவிந்தன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேசி னார். முன்னதாக மதுராந்தகம் கோட் டாட்சியரிடம் கோரிக்கை மனுக்க ளைச் சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர்.
தேசிய மனித உரிமை ஆணையம் நடத்திய பொது விசாரணையில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்ப டையில் சட்ட விரோதமான ஆக்கிர மிப்புகளை அகற்றி தவறுதலான பட்டாக்களை ரத்து செய்து பஞ்சமி நிலங்களை அப்பகுதியில் உள்ள தலித் மக்களுக்கு மறு ஒப்படைப்பு செய்ய வேண்டும், இரண்டு மூன்று தலைமுறைகளாய் பல ஜமாபந்தி களில் மனு கொடுத்தும் வீட்டுமனைப் பட்டா இல்லாமலும் வீட்டுமனை இல்லாமலும் உள்ள உழைக்கும் ஏழை மக்களுக்கு அரசாணை 318இன் படி பட்டா வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இலத்தூர் ஒன்றியத்தில் தண்டரைக் கிராமம் மதுராந்தகம் ஒன்றியத்தில் சூரை, காவாதூர், மாரிபுத்தூர் ஆகிய பகுதிகளிலும் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் ஆத்தூர், வெள்ளபுத்தூர், கீழ்மின் னல், கழனிப்பாக்கம், எல்.எண்டத் தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும், பஞ்சமி நிலமீட்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த சான்தாமசு, ஏழுமலை ஆகியோரின் குடும்பங்க ளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.