தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ஒரு மாதத்திற்கு ரூ. 26,000 வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என சிஐடியு தலைமையில் தில்லி முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சலான எலி சுரங்கத் தொழிலாளி போராட்டத்தில் பங்கேற்றார். சிபிஐ (எம் ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளருமான தபன் சென், தேசிய செயலாளர் சுதீப் தத்தா ஆகியோர் பங்கேற்றனர்.