tamilnadu

img

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 5-வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமானது முதல் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப் பட்டுள்ளது. கரூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக பதிவாகக் கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காடு, சேலத்தில் 7 செ. மீட்டரும், திருப்பூரில் 6 செ. மீட்டரும், போச்சம்பள்ளி, ஓமலூரில் 5 செ.மீட்டரும், ஈரோட்டில் 4 செ. மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.