சென்னையில் ஆட்டோ, வாடகை கார்களுக்கு காவல் உதவி QR குறியீடு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
காவல் உதவி QR குறியீடு திட்டத்தின் மூலம், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், ஆட்டோ அல்லது வாடகை கார்களில் செல்லும் சமயத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால், அவ்வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
இந்த SOS தகவலில் வாகனம் பற்றிய முழு தகவல் மற்றும் வாகனம் சென்று கொண்டிருக்கும் இடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும். பின்னர் உடனடியாக அருகில் இருக்கும் ரோந்து வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி தேவைப்படுபவருக்கு உடனடியாக உதவி செய்யப்படும்.
சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த QR குறியீட்டை ஓட்டுவது கட்டாயமாகப்பட்டுள்ளது. QR குறியீடு ஒட்டிய பிறகு, அதை நீக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.