இளஞ்சிவப்பு’ ஆட்டோ திட்டம்; முதல்வர் தொடங்கி வைத்தார்!
சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி, சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற்ற உலக மக ளிர் நாள் விழா நிகழ்ச்சியில், பெண் ஓட்டுநர்களைக் கொண்ட ‘இளஞ் சிவப்பு’ ஆட்டோ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ‘மார்ச் 8’ சர்வ தேச மகளிர் நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பெண்களுக் கான பல்வேறு நலத்திட்டங்களை முதல் வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அதன்படி, சமூக நலன் மற்றும் மக ளிர் உரிமைத்துறை சார்பில் 100 மக ளிருக்கு ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ வழங்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப் பட்டு, தலா ரூ. 1 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுய உதவிக்குழு மகளிருக்கு 50 நீல நிற மின் ஆட்டோக்கள், 100 மஞ்சள் நிற ஆட்டோக்கள் என மொத்தம் 250 ஆட்டோக்களை வழங்கி, அவற்றின் இயக்கத்தை கொடியசைத்து முதல மைச்சர் தொடங்கி வைத்தார்.
சுமைக்கு கட்டணமில்லை 1
000 மகளிர் சுய உதவிக் குழுவின ருக்கு பல்வேறு பயன்களைத் தரக் கூடிய அடையாள அட்டைகளை வழங் கிய முதலமைச்சர், “இந்த அடையாள அட்டை மூலம், கிராம மற்றும் நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை விலையின்றி எடுத்துச் செல்லலாம்” என்றார். மேலும், “கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்படும் பயிர்க்கடன், கால்நடை கடன், சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், மாற்றுத்திறனாளி கள் கடன் எனப் பல்வேறு கடன்களைப் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப் படும்” என்றும்; “கோ-ஆப்டெக்ஸ் நிறுவ னத்தில் வாங்கும் பொருட்களுக்கு 5 சத விகித கூடுதல் தள்ளுபடி மற்றும் ஆவின் நிறுவன கடைகளில் குறைந்த விலை யில் பொருட்கள் வழங்கப்படும். இ- சேவை மையங்களில் அனைத்து சேவை களுக்கும் 10 விழுக்காடு சேவைக் கட்ட ணம் குறைப்பு சலுகைகள் கிடைக்கும்” என்றார்.
ரூ.366.26 கோடி வங்கிக் கடன்
தமிழ்நாடு முழுவதும் 34 ஆயிரத்து 73 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4 லட்சத்து 42 ஆயிரத்து 949 மகளி ருக்கு, 3 ஆயிரத்து 190 கோடியே 10 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு கள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 3 ஆயி ரத்து 584 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 592 மகளிருக்கு ரூ. 366 கோடியே 26 லட்சம் வங்கிக் கடன் இணைப்புகளை முதலமைச்சர் வழங்கினார்.
பெண் தொழிலாளர்களுக்கு வீடுகள்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலா ளர் நல வாரியத்தின் கீழ், பதிவு செய் துள்ள 40 பெண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் மூலம் வீடுகள் பெறு வதற்கான உதவித்தொகை ஆணை களும், 10 பெண் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொள்வதற்கான ஆணைகளும் 50 பெண்களுக்கு 1.18 கோடி ரூபாய் நிதி உதவிகளையும் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
யசோதாவுக்கு அவ்வையார் விருது
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்து வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனை வர் யசோதா சண்முக சுந்தரத்திற்கு 2025-ஆம் ஆண்டுக்கான அவ்வை யார் விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பெண் களுக்கு எதிரான வன்முறை, போதை ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாது காப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வடிவமைத்து, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவி லைச் சேர்ந்த சவுமியாவிற்கு, பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும், பெண் குழந்தைகள், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகளை யும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
8 மாவட்டங்களில் தோழி விடுதிகள்
காஞ்சிபுரம், ஈரோடு, சிவ கங்கை, தருமபுரி, தேனி, கடலூர், ராணிப்பேட்டை, நாகப் பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் 700 படுக்கை வசதிகளுடன் ரூ. 72 கோடி மதிப்பிலான ‘தோழி விடுதி கள்’ அமைக்கப்படும் என்றும் மக ளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்