கள்ளக்குறிச்சி, நவ. 30- சென்னை ஆவின் பொது மேலாளர் சங்கீத பணி மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிய வருவாய் அலுவலராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி, வட்டாட்சியர் ராஜசேகர், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் காதர் அலி, குற்றவியல் அலு வலக மேலாளர் வெங்கடேசன், பொது அலுவலக மேலாளர் இந்திரா, மண்டல துணை வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரி வித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சங்கீத கூறுகையில், நலத்திட்ட பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.