டிரம்ப் உருவப்படத்தை எரித்து போராட்டம் சென்னை மாநகர காவல்துறை அராஜகம்
சென்னை, ஜன. 6 - அமெரிக்க அதிபர் டிரம்பின் உருவப்படத்தை எரித்து மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். வெனிசுலா நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் மதுரோவை கடத்திய அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் செவ்வாயன்று (ஜன.6) தரமணி சிக்னல் சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதனால் அங்குள்ள வாலிபர் சங்க அலுவலகத்தில் சங்க முன்னணி ஊழியர்கள் திரண்டனர். இதனையறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அத்துமீறி அலுவலக வளா கத்தில் நுழைந்து தலை வர்களை கைது செய்த னர். இதனால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை யடுத்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.மிருதுளா தலைமையில் ஒருபகுதியினர் மோடியின் உருவப்படத்தை எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட னர். மற்றொரு பகுதியினர் சாலையில் மறுபுறத்தில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனையும் மீறி அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மிருதுளா, வாலிபர் சங்க மாநிலத் தலை வர் செல்வராஜ், பொரு ளாளர் தீ.சந்துரு, மாதர் சங்க மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, செயலாளர் ஆ.ராதிகா, துணைத்தலை வர் எஸ்.வாலண்டினா, மாவட்ட நிர்வாகிகள் அமர்நீதி, ச.ஆனந்தகுமார் (மாணவர் சங்கம்), என்.குமரன், சிந்தன் (வாலி பர் சங்கம்), எஸ்.சரவணச் செல்வி, எம்.சித்ரகலா, ஹேமாவதி (மாதர் சங்கம்) உள்ளிட்ட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
