தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றிய ஒன்றிய அரசை கண்டித்து, திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் சிஐடியூ, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் உரையாற்றினர்.