சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் கருத்தரங்கம் நடத்த ஆலோசனை
திருவண்ணாமலை,ஜன.18- ஏழை, எளிய சாமானிய மக்களுக்கும் கல்வி ஒளி கிடைக்க வேண்டும் என அரும்பாடுபட்ட சுவாமி சகஜானந்தா கடந்த 1890 ஜனவரி 27 அன்று ஒன்று பட்ட வட ஆற்காடு மாவட்டம் மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் பிறந்தார்.ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவரான இவர், திரு நாளைப்போவார் (எ ) நந்தனார் பெயரில் மடமும் மற்றும் கல்விசாலையும் ஏற்படுத்தி கல்விப்புரட்சி செய்தார். 1936-1959 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் சட்டமன்றத்தில் சாமானிய மக்களுக்காக குரல் கொடுத்தவராவார். பல லட்சக்கணக்காக பட்டதாரிகளை உருவாக்கி யவர். சுவாமி சகஜானந்தா தியாகத்தையும், கல்வி பணியின் சிறப்பையும் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு, சுவாமி சகஜானந்தர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்ட டாடப்படும் என கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருவண்ணா மலை மாவட்டக் குழு சார்பில், சுவாமி சகஜா னந்தா பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து கருத்தரங்கங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அதன்படி வரும் ஜனவரி 27 ஆம் தேதி பெரணமல்லூரில் சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் கருத்தரங்கம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிறு (ஜன. 18) அன்று பெரணமல்லூரில் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத்தலைவர் மா. கௌதம்முத்து தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், வட்டார செயலாளர் பிரபாகரன், இடைக் குழு உறுப்பினர்கள் பி.கே. முருகன், மு.கபில்தேவ், இரா.ராஜசேகரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.வாசுகி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செய லாளர் ராமதாஸ் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கே.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெரணமல்லூர் வடக்கு பகுதியில் நிகழ்ச்சியை நடத்தவும் அதிக அளவில் ஆட்களைத் திரட்ட வும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
