சென்னை, ஏப். 12 -மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளியன்று (ஏப்.12) தமிழகம் முழுவதும் மாற்றத்திறனாளிகள் வாக்கு சேகரிப்பில்ஈடுபட்டனர்.மதவெறி அரசியலுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் சார்பில் இந்த வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. திருபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தாம்பரம், கேம்ப் சாலை, பரங்கிமலை, போரூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தனர்.தென்சென்னை தொகுதி வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு மேடவாக்கம், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய இடங்களிலும், மத்திய சென்னை தொகுதிவேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு ஆயிரம விளக்கு பகுதியிலும் துண்டுபிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் என்.சாந்தி, பொருளாளர் கே.பி.பாபு, நிர்வாகிகள் மாயவன், எம்.சரஸ்வதி, சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.