சென்னை, டிச. 5 - தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவ ராக முதல்வர் மு.க. ஸ்டா லின் உள்ளார். துணைத் தலைவராக ஜெயரஞ்சன் மற்றும் இதர உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திட்டக்குழுவின் துணைத் தலைவராக நிய மிக்கப்பட்டுள்ளார்.
திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் அமைச்சர் என்ற முறையில் உதயநிதி அலு வல் சாரா துணைத் தலைவ ராக நியமனம் செய்யப் பட்டுள்ளார். துணைத் தலைவராக இருந்த ஜெயரஞ்சன், செயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, தமிழக தலைமைச் செயலாளர் நா.முருகா னந்தம் அலுவல் சாரா உறுப் பினராக நியமிக்கப்பட்டுள் ளார். மேலும் இரு முழுநேர உறுப்பினர்களும், 7 பகுதி நேர உறுப்பினர்களும் உள்ளனர்.