tamilnadu

img

வீட்டு வாடகை வசூலிக்கத் தடை விதித்து அரசாணை பிறப்பிக்க கோரி வழக்கு

சென்னை:
தமிழ்நாட்டில் வாடகைதாரர் களிடம் இருந்து மூன்று மாதக் காலத்திற்கு வாடகை கட்டணத்தை வீட்டின் உரிமையாளர்கள் வசூலிக்ககூடாதென அரசாணை பிறப்பிக்கு மாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, குடியிருப்பு வாசிகளிடம் இருந்து நிலம், வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மார்ச் 29 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் பேரிடர் மேலாண்மை சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய் தடுப்பு அவசரகால சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.

இந்த உத்தரவுகள் அனைத்தும் காகித அளவில்தான் உள்ளது. இதனால், வாடகை தாரர்களுக்கு எந்த பலனும் இல்லை.பெருந்தொற்று காலத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற மத்திய அரசு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விவரத்தை வருவாய் மற்றும் காவல்துறை மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விளம்பரம் செய்ய உத்தரவிட வேண்டும். இரண்டு மாதத்திற்கும் மேலாக அமலில் இருந்து வரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாடகை தாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை வசூலிக்கக்கூடாது என்று அனைத்து நில, வீட்டின் உரிமை யாளர்களுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படு கிறது.