சென்னை:
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்கப்படவேண்டிய அதிகபட்ச கட்டண விபரங்களை நிர்ணயித்து, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடியவர்களுக்கு அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் ஆகவும், தீவிர சிகிச்சைப் பிரிவு எனில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. மேலும், இந்திய மருத்துவச் சங்க தமிழ்நாடு கிளை நிர்வாகிகள், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தனர்.இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப் படவேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது. இந்த அறிக் கையை ஆய்வு செய்த தமிழக அரசு, மக்கள் நலன் கருதி , கட்டணங்களை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.
அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடியவர்களுக்கு அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் ஆகவும், தீவிர சிகிச்சைப் பிரிவுஎனில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ஆகவும் கட்டணம் தனியார் மருத்துவமனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணம் என்றும், இதற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.