tamilnadu

img

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் : 58 பேருக்கு பணி ஆணை....

சென்னை:
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அரசாணையின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சனிக்கிழமையன்று(ஆக.14) அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்கும் மற்றும் அர்ச்சகர்கள்,பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குத் திருக்கோயில்களில் பணிபுரியதேர்வு செய்யப்பட்ட  172 நபர்களுக்கும், கருணைஅடிப்படை யில் 12 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.