சென்னை:
தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் பலர் கூட்டமாக அமர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்திக் கொள்ளும் காணொலி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் இன்றைய இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கவலைக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியிருப் பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.சென்னையில் இன்று காலை ரூ.1 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருட் களை காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது. இது தொடர்பாக 5 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை இன்னும் குறையவில்லை; அதிகரித்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.போதைப் பழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் உடல்நலம் சார்ந்த கோணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது. போதை உச்சத்திற்கு செல்வதால் இழைக் கப்படும் வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை அண் மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.இதற்காக மாவட்ட அளவில் தனித் தனி படைகள் அமைக்கப்பட்டு, எங்கெல்லாம் போதைப் பொருட்கள் விற்கப்படுகின் றனவோ, அங்கெல்லாம் அதிரடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும்; போதைப் பொருட்களை விற்பனை செய்வோரை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.