tamilnadu

முன்பருவக் கல்வி ஆசிரியர் விவகாரம்: அமைச்சர் விளக்கம்

சென்னை, ஜூலை 2- அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளில் 4 வயது பூர்த்தியான பிறகே முன்பருவக் கல்வி (எல்கேஜி) வகுப்பில்  சேர்க்கிறோம். அதற்  கேற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி  அளித்து அங்கு பணியமர்த்தப்படு கின்றனர். மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு, அதனை கணக் கிட்டு அதற்கேற்ற ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டை யன் விளக்கம் அளித்தார். பேரவையில் செவ்வாயன்று (ஜூலை 2) பள்ளிக் கல்வி, உயர்  கல்வித் துறை மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக உறுப்பி னர் சி.வி.எழிலரசனுக்கு மேற்  கண்டவாறு அமைச்சர் பதில ளித்தார். இதனைத் தொடர்ந்து நடை பெற்ற விவாதம் வருமாறு: எழிலரசன்: பள்ளி மாண வர்களுக்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இல வச பேருந்து பயண அட்டை வழங்கவில்லை. அமைச்சர் செங்கோட்டை யன்: கடந்தாண்டு பயன்படுத்திய இலவச பயண அட்டையை பயன்படுத்தி செப்டம்பர் மாதம்  வரை மாணவர்கள் பயணிக்க லாம். பள்ளி சீருடை அணிந்தி ருந்தாலே அவர்களை பேருந்து களில் அனுமதிக்கலாம் என்று  முதலமைச்சர் மூலம் ஆணை யிடப்பட்டுள்ளது. பள்ளி அடை யாள அட்டை, இலவச பயண  அட்டை இரண்டையும் இணைத்து  ஸ்மார் கார்டாக வழங்க பரி சீலித்து வருகிறோம். எழிலரசன்: கட்டாய கல்வி  உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்க ளுக்கு அரசு கட்டணம் செலுத்து கிறது. இதனால் அரசு பள்ளிக்கு  வர வேண்டிய மாணவர்கள் தனி யார் பள்ளிக்கு செல்கின்றனர். எனவே, அரசு பள்ளி இல்லாத இடங்களில் தனியார் பள்ளியில் சேருகிறது மாணவர்களுக்கு மட்டும் அரசு கட்டணம் செலுத்தி னால் போதுமானது. அமைச்சர்: அரசு பள்ளியி லிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்ற ளவில் தனியார் பள்ளிகள் இருக்கக்கூடாது என்று கர்நாடக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. தற்போது உறுப்பின ரும் புதிதாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார். எனவே, உறுப்பி னர் கோரியபடி அரசு பரிசீலித்து விரைவில் அரசாணை வெளியிட உள்ளது. இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.