சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் சீரான வேகத்தில் பரவி வருகிறது. தினமும் சராசரியாக 50 பேர் வீதம் கொரோனவால் பாதிக்கப்படுவதால் தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. எனினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை ஊரடங்கில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப் பதிவு, வாகன பறிமுதல், அபாரதம் போன்றவை விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊரடங்கு வரும் 14-ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், மே மாதம் நடைபெறுவதாக இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.