பொங்கல் விளையாட்டுப்போட்டிகள்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி, டாக்டர் காணு நகர் கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், பொருளாளர் சிந்தன், பகுதி தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சதீஷ், துணைத் தலைவர் நிரஞ்சனா, துணைச் செயலாளர் அபினேஷ் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
மதுரவாயல் பாலர் பூங்கா சார்பில் ஊர்கூடி பொங்கல், விளையாட்டு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா எம்எம்டிஏ 7வது பிளாக் பூங்காவில் நடைபெற்றது.
