சென்னை,ஜன.17- காணும் பொங்கலையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உப்ப னாறு அருகே மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை காடுகள் உள்ளன. இதனை ரசிப்பதற்காக வெளி நாடுகள் மற்றும் தமிழகம் முழுவதி லும் இருந்து ஏராளமான சுற்றுலா பய ணிகள் வருகை தந்தனர். காணும் பொங்கலையொட்டி காலை முதலே குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்த மாக படகு சவாரி செய்து சுரபுன்னை காடுகளை பார்த்து ரசித்தனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்ட தால் படகு சவாரி செய்ய பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கட லூர் வெள்ளி கடற்கரையிலும் ஏராள மான மக்கள் குவிந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டைக்கும் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள வர லாற்றுச் சின்னங்களை பார்த்து மகிழ்ந்தனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்த தால் கோட்டை அடிவாரத்தில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டாலும் களை கட்டியது.
பழவேற்காடு
சென்னை அருகே உள்ள பழ வேற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்த னர். கடற்கரையில் குளித்தும், மர நிழல்களில் அமர்ந்தும் உற்சாகமாக பொழுதை கழித்தனர். வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்தி ருந்த உணவை உண்டு மகிழ்ந்தனர். அங்குள்ள டச்சுக் கல்லறை, நிழல் கடிகாரம் ஆகியவற்றை கண்டு களித்தனர். இந்த ஆண்டும் ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பறவைகள் சரணால யத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்
புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். வெண்ணை உருண்டை பாறை, அர்ஜூணன் தபசு, கடற்கரைக் கோவில், ஐந்து ரதம், கலங்கர விளக்கம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தும், ஆங்காங்கே குடும்பத்துடன் அமர்ந்து விளையாடியும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். இதை யொட்டி சென்னையிலிருந்து 450க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஊட்டி
காணும் பொங்கலை முன்னிட்டு ஊட்டியில் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அள வில் குவிந்தனர். அவர்கள் தாவரவி யல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தனர். படகு இல்லத்தில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்கா விலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
திருமூர்த்தி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலை பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளி லும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா தலங்களில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குரங்கு நீர் வீழ்ச்சி
கோவையில் வ.உ.சி. பூங்கா, மருத மலை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து இருந்தனர். வ.உ.சி. பூங்கா வில் உள்ள சிறுவர் பூங்காவில் சிறு வர்கள் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். கோவை குற்றாலத்தில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பூங்கா, டாப்சிலிப் ஆகிய பகுதிகளி லும் சுற்றுலா பயணிகள் அதிக அள வில் வந்து இருந்தனர். குரங்கு நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம்
தென்காசி மாவட்டம் குற்றா லத்தில் மெயினருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறை வாக காணப்பட்டது. ஆண்கள் பகுதி யில் மட்டும் குளித்து மகிழ்ந்தனர். பெண்கள் பகுதியில் குறைந்த அளவில் நீர்வரத்து உள்ளது. ஐந்தருவி யில் 4 கிளைகளிலும் தண்ணீர் வருவ தால் அங்கு கூட்டம் அதிகமாக உள்ளது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்லா யிரக்கணக்கில் குவிந்த மக்கள், குடும்பத்தினருடன் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
முக்கொம்பு
திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் மற்றும், ஸ்ரீரங்கம், மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு ஆகிய சுற்றுலாத் தலங்க ளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கொம்பில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்த னர். அவர்கள் காவிரி ஆற்றில் உற்சாக மாக குளித்தும், பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். இதையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.
பாரம்பரிய கலைகள்
ஈரோடு மாவட்டம் ராசாம்பாளை யத்தில் பாரம்பரிய கலைகளான சிலம்பம், பரதநாட்டியம் உள்ளிட்ட வற்றுடன் பொங்கல் விழா நடை பெற்றது. பொங்கல் விழாவில் பாரம்ப ரிய சேலைக் கட்டில் வந்த சின்னஞ்சிறுமியின் சிலம்பத் திறன் காண்போரை வியக்கச் செய்தது. இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் தங்கள் சிலம்பத் திற னைக் காட்டினர் பறையிசை முழங்க நடைபெற்ற சிலம்பக் கலை நிகழ்ச்சி கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. பொங்கல் விழாவை முன்னிட்டு பரத நாட்டியம், உறியடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
காணும் பொங்கலையொட்டி தேனி மாவட்ட எல்லையையொட்டி யுள்ள கேரளாவின் பிரபலமான சுற்றுலா தலமான மூணாறு, தேக்கடி, மாட்டுப்பட்டி, குண்டளை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு அவர்கள் பூங்காக்களில் குடும்பத்து டன் விளையாடியும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பனிப்பொழி வுடன் கூடிய இதமான சூழலில் வனப்பகுதியை சுற்றிப்பார்த்து உற்சாகம் அடைந்தனர். இதேபோன்று கொடைக்கானல், கன்னியாகுமரி, ஒகேனக்கல், சேலம், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநி லத்தின் அனைத்து சுற்றுலா தளங்க ளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.