சென்னை
கிருஷ்ணகிரி சத்தியம் டிவி ரிப்போட்டரை தாக்கிய காவல்துறை எஸ்எஸ்ஐ, பாஸ்கரை பணியிட மாற்றம் செய்த மாவட்ட ஆட்சியர்,எஸ்பிக்கு மனமார்ந்த பாரட்டுதலையும், நன்றியையும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலதலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்," கிருஷ்ணகிரியில் ஏப்ரல் 9-தேதியன்று மதியம் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள் தூய்மைபணியாளர்களுக்கு கொரோனா நிவாண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சென்று செய்துசேகரித்துவிட்டு திரும்பிய சத்தியம் டிவி ரிப்போட்டர் பாஸ்கர் அன்று மாலை 4:30,மணியளவில் கிருஷ்ணகிரி 5,ரோடு வழியாக வந்துள்ளார். அங்கு 144- தடைஉத்தரவை கடைபிடிக்காமல் கூட்டமாக இருந்ததை கண்டார்.
மேலும் அங்கு போலீஸ் நண்பர்கள் குழுவைச்சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போக்குவரத்தை சரிசெய்யமுடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.இதனை சத்தியம் டிவி ரிப்போட்டர் பாஸ்கர் ஒளிபதிவுசெய்தார்.
இதனை பார்த்த காவல்துறை எஸ்எஸ்ஐ பாஸ்கர், சத்தியம் டிவி செய்தியாளரை செய்திசேகரிக்கவிடாமல் தடுத்து தகாதவார்த்தையால் திட்டினார்.மேலும் கடுமையாக அடித்துள்ளார்.அவரிடம் இருந்து நிறுவன ஐடி கார்டு,கேமிரா ஆகியவற்றை பிடிங்கிகொண்டார். தாக்குதலுக்குள்ளான சத்தியம் டிவி ரிப்போட்டர் பாஸ்கரை சக பத்திரிகையாளர்கள் அழைத்துசென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றசெய்தனர்.
ரிப்போட்டர் பாஸ்கர் தாக்குதல் குறித்து சென்னை சத்தியம் டிவியில் தலைமை செய்தியாளர் கண்ணன் ,தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலதலைவர் பி.எஸ்.டி.புருசோத்தமன் அவர்களை தொடர்புகொண்டு நடந்ததை தெரிவித்து உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். இதனையடுத்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலதலைவர் பி.எஸ்.டி.புருசோத்தமன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிராபகர் அவர்களை செல்பேசியில் தொடர்புகொண்டு இப்பிரச்சனை குறித்து சம்மந்தப்பட்ட காவல்துறை எஸ்.எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வவியுறுத்தினார். ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பண்டிகங்காதரிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு ரிப்போட்டர் பாஸ்கரை தாக்கிய எஸ்எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் எஸ்பி உத்தரவின் பேரில் டி.எஸ்பி,தலைமையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சத்தியம் டிவி ரிப்போட்டர் பாஸ்கரிடம் விசாரணை செய்தனர். பின்னர் டிஎஸ்பி, குமார் , இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கிருஷ்ணகிரி பிரஸ்கிளப் தலைவர் ரமேஷ் ,உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சம்மந்தப்பட்ட காவல்துறை எஸ்எஸ்ஐ பாஸ்கர் சத்தியம் டிவி ரிப்போட்டரை தாக்கியதற்கு வருத்தம் தெரிவித்தார்.
இதனையடுத்து மாவட்டகாவல்கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் உத்திரவின் பேரில் எஸ்எஸ்ஐ பாஸ்கரை ஓசூர் கர்னாடக எல்லை பகுதிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனை ஏற்றுகொண்ட பத்திரிகையாளர்கள் கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவை தடுக்க காவல்துறையும் பத்திரிகையாளர்களும்ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவுசெய்யப்பட்டது.
இப்பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் மற்றும் கிருஷ்ணகிரி பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (TUJ) மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.