திருநின்றவூர், மே 26-ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபி (15). சனிக்கிழமையன்று மதியம் நண்பர்கள் 5 பேருடன் சேருந்து கோபி பாலவீடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். முதலில் கோபி கிணற்றுக்குள் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.இதுபற்றி கோபியின் பெற்றோருக்கு தகவல்தெரிவித்தனர். ஆவடிதீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் கோபியை மீட்க முடியவில்லை.இதைத்தொடர்ந்து ராட்சத மோட்டார் கொண்டு வரப்பட்டு கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றினர். நள்ளிரவில் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் கோபியின் உடல் மீட்கப்பட்டது.