tamilnadu

img

சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையில் ஆட்சியர் தலையிட மனு

சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையில் ஆட்சியர் தலையிட மனு

ஈரோடு, ஜன. 5- சுமைதூக்கும் தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக் கையில் ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என  சிஐடியுவினர் திங்களன்று மனு அளித்தனர். ஈரோடு மாநகரத்தை சுற்றியுள்ள வணிக, வியாபார நிறுவ னங்களில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுமைதூக் கும் தொழிலாளர்கள் உள்ளனர்.  இத்தொழிலாளர்கள், கனரக மற்றும் இலகு ரக பொருட் களை போக்குவரத்து வாகனங்களில் ஏற்றி இறக்க கூலி நிர்ண யம் செய்யப்படும். தொழிலாளர் சங்கத்திற்கும், வர்த்த கர் சங்கங்களுக்கும் இடையில் பேசி முடித்து உடன்பாடு  ஏற்படும். இந்த உடன்பாடு மூன்றாண்டுகள் நீடிக்கும். தற் போது, உடன்பாடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலை யில், கூலி உயர்வு உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இதுநாள் வரையில் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. 2025 மார்ச் மாதத்துடன் உடன்படிக்கை நிறைவடை யும் முன்பே நூல், ஜவுளி, கெமிக்கல் வர்த்தகர் சங்கத்திற்கு  கூலி உயர்வுக்கான கோரிக்கையை சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் முன்வைத்தனர். பேசித்தீர்வு காணவும் புதிய உடன்படிக்கையை ஏற்படுத் தவும் வேண்டி மேற்கண்ட வர்த்தகர் சங்கங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் 9 மாதங்கள் கடந் தும் பேசித்தீர்வு காண வர்த்தகர் சங்கங்கள் முன் வர வில்லை. இதனால் சுமைதூக்கும் தொழிலாளர்கள்  கூலி உயர்வு கிடைக்காமல், கடும் விலைவாசி, வாடகை உயர்வு,  கல்வி கட்டண உயர்வு போன்றவற்றால் மிகுந்த சிரமத்திற்கு  உள்ளாகின்றனர்.  எனவே, இந்த கூலி உயர்வு கோரிக்கை மீது சுமூகமாக  பேசித்தீர்வு காண வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் துறை மூலம் தலையிட்டு உடன்பாடு எட்டவும், தொழில் அமைதி உருவாக தலையீடு செய்ய வேண்டும் என சிஐடியு  சுமைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம்  மனு  அளித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன், சங்க பொதுச் செயலாளர் என்.செந்தில்குமார், பொருளா ளர் ஜி.செந்தில்குமார் மற்றும் திரளான தொழிலாளர்கள் பங் கேற்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.