சென்னை:
கொரோனா பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் வழங்கப் பட்டுள்ள நிலையில், வரும் மாதங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டெங்கு ஒழித்ததுபோல் கொரோனாவை ஒழிக்க செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
கொரோனா பொதுமுடக் கத்தில் இருந்து தளர்வுகள் வழங்கப் பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டா யம் கடைபிடிக்க வேண்டும். முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் மறைக்கப்படுவதா கவும், குறைத்து காட்டுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. கொரோனா உயிரிழப்புகளை தமிழக அரசு மறைக்கவில்லை. மறைப்பதற்கான அவசியமும் இல்லை.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி
தமிழகத்தில் சனிக் கிழமை(ஜூலை 3) முதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. வரும் வாரங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண் டும். தளர்வுகள் அளிக்கப் பட்டுள்ளதால் மக்கள் கவனமின்றி செயல்படக் கூடாது. கொரோனா நமக்கு இல்லை என்றும் எண்ணிவிடக் கூடாது.பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. முகக் கவசம் அணிதல், கைகழுவுதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.டெங்குவை எப்படி ஒழித்தோமோ அதேபோன்று கொரோனா பெருந் தொற் றையும் ஒழிக்க செயல் பட வேண்டும். டெல்டா பிளஸ் மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண் காணிக்கப்படும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.