states

img

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 

சென்னை :கேரளாவில் பரவியுள்ள நிபா வைரஸ் குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் பன்னிரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனால், அவருடன் தொடர்பிலிருந்த 188 பேரும்  தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கேரளாவில் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, வைரஸ் தொற்றின் ஆரம்ப தொடர்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லை மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.