பொன்னேரி, ஆக. 23- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கிருஷ்ணாபுரம், கொடூர் உட்பட பல பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து லாரிகளில் எடுக்கப்படும் கழிவு நீரை தடப்பெரும்பாக்கம் ஊராட் சிக்கு உட்பட்ட சிங்கிலிமேடு கிராமத்தில் குடியிருப்பு அரு கில் உள்ள விவசாய நிலத் தில் கொட்டி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டு களாக சிங்கிலிமேடு கிரா மத்தை குப்பை தொட்டியாக பயன்படுத்தி கழிவு நீரை கொட்டி வருகின்றனர். நாள் தோறும் 50க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் கொண்டு வரும் கழிவு நீரை தெரு முழு வதும் சிந்திக் கொண்டு செல்வதால் ஊரே துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிக ரிப்பதோடு, சுகாதார சீர்கேடு களை விளைவிக்கும் சூழ லும் உருவாகியுள்ளது. விவ சாய நிலத்தில் கெட்டுவதால் அருகில் உள்ள விவசாய நிலங்களும் பாழாகி வரு கிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் பக்கத்தில் உள்ள விவசாய நிலங்களில் மனித கழிவுகளான மலம், சிறுநீர் கலந்து கழிவுநீர் விவசாய நிலங்கள் மற்றும் சமவெளிகளில் பாய்கிறது.இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதித்து வரு கின்றனர். தனி நபர்கள் சிலரின் இலாப நோக்கத்திற்காக சிங்கிலிமேடு கிராமத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கிறது.இந்த ஊராட்சியில் விதி முறைகளை மீறி, மக்களின் எதிர்ப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊராட்சி செயலர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர். சம்மந்தப்பட்டதுறை அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.