tamilnadu

பாராலிம்பிக்கில் பதக்கம்: வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து...

சென்னை:
பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாரா உள்ளிட்டோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், பாரா துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் பெற்றுள்ள அவனி லெகாராவுக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.வட்டு எறிதலில் வெள்ளி வென்றுள்ள யோகேஷ் கத்தூனியாவுக்கும்; ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திர ஜஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.