ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதியவர்களை, பி.ஆர்க். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த விசாரணையின்போது பி.ஆர்க். படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்குவதால், ஜே.இ.இ. தேர்வில் தகுதி பெற்றவர்களையும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவும், மாணவர்கள் தேர்வு என்பது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்டுள்ளது.