விழுப்புரம், நவ.12- பணித்தள பொறுப்பாளர்கள் தொடர்ந்து பணி செய்வதற்கான அனுமதி வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம்,காணை ஒன்றி யம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், பணித்தள பொறுப்பாளர்களாக பணிசெய்து வந்த வர்களுக்கு தற்போது வேலை வழங்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்த னர். அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், அப்போதைய முதல்வர் ஜெய லலிதா மூலம் பணித்தள பொறுப்பாளர்க ளாக காணை ஒன்றியத்தில் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டோம். தற்போது, பணித்தள பொறுப்பாளர்கள் செய்யும் பணியை, எங்களுக்கு எந்தவித முன் அறிவிப்புமின்றி, எங்களை பணியில் இருந்து நீக்கி விட்டனர். எங்களுக்கு பதிலாக, வறுமை ஒழிப்பு சங்கத்தில் இருந்த வேறு ஒரு நபரை, நியமித்து, அவர்களுக்கு மாத ஊதியம் வழங்குகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மூலம் அறிவிக்கப்பட்ட நாங்கள், பஞ்சாயத்து வேலைகள் அனைத்தையும் ஊராட்சி செய லர்களுக்கு, உறுதுணையாக இருந்து செய்து வந்தோம். எங்களைத் தொடர்ந்து, பணி செய்ய அனுமதி வழங்குவதோடு, பணி நிரந்த ரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரி வித்துள்ளனர்.