சென்னை, ஜூன் 27- கொரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை செய லாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். சென்னை, தண்டையார் பேட்டையில், சனிக்கிழமை (ஜூன் 27) நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: “மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார மையத்தின் கருத்து களைக் கேட்டு கொரோனா பரி சோதனைகளை அதிகரித்துள் ளோம். நாளொன்றுக்கு 32 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை கள் நடைபெறுகின்றன. சென்னை யில் நாளொன்றுக்கு 3,000 பரிசோத னைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 9,000-10,000 ஆக பரிசோத னைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன. வெள்ளியன்று (ஜூன் 26) வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்துள்ளோம். முன்பே ஏன் பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை எனக் கேள்வி யெழுப்புகின்றனர். ஆரம்பத்தில், கொரோனா பரிசோதனை மையங் களுக்கு ஐ.சி.எம்.ஆர். படிப்படி யாகத் தான் அனுமதி அளித்தது. தமிழ்நாட்டில் அதிகமான பரி சோதனை மையங்கள் உள்ளன. அதில் 70 விழுக்காடு அரசுப் பரி சோதனை மையங்கள்.
அச்சப்படவேண்டாம்
எண்ணிக்கையை வைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண் டாம். தமிழ் நாட்டின் செயல்பாடு கள் மிகவும் சிறப்பாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலா ளர் கூறியுள்ளார். பட்டிதொட்டி யெல்லாம் சென்று இரவு, பகலாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத னால் அறிகுறியற்ற தொற்றாளர் களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படு கிறது. சிகிச்சை அளிக்காததால் ஒரு வர் உயிரிழப்பதைத் தடுக்க இது தான் வழி. காய்ச்சல் முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்க ளைத் தாங்களே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். சென்னை யில் காய்ச்சல் முகாம்களை நாளொன் றுக்கு 35 ஆயிரம் மக்கள் பயன் படுத்துகின்றனர். சென்னை மாநக ராட்சியில் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், இதுவரை 9,539 தெருக்களில் மட்டும் தான் கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. அதில், 7,421 தெருக் களில் 3-க்கு மேற்பட்டவர்களும், 812 தெருக்களில் 5-க்கும் மேற்பட்ட வர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிகரமான கண்ணகி நகர்
ஊரடங்கால் கொரோனா தொற்று மற்றவர்களுக்குப் பரவு வது தடுக்கப்படுகிறது. சென்னை யில் 1,979 குடிசைப் பகுதிகள் உள்ளன. கண்ணகி நகர், எழில் நகர், திடீர் நகரில் வெற்றிகரமான முடிவுகள் எட்டப்பட்டுள் ளன. பொதுமக்களின் ஒத்துழைப்பால் இங்கு தொற்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அங்கு எல்லோரும் முகக் கவசம் அணிகின்றனர்.
மூத்த குடிமக்களை பாதுகாத்திடுக!
இது புதிதாக உருவான நோய். இது அதிகமான மக்களுக்கு வந்த பின்னர் தான் இறங்கும் என்பது பொது சுகாதாரத்துறையின் கருத்து. இதை நமக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றால் 100ரூ முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். ஏற்கெ னவே இணை நோய்கள் உள்ளவர் கள், முதியவர்களைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதுதான் மருத்துவம் சாராத முறை. இதற்குப் பொதுமக்கள் அனைவரும் ஒத்து ழைப்பு கொடுக்க வேண்டும்.
11வகையான சிகிச்சைகள்
இந்திய மருத்துவம், ஹோமியோ பதி, ஆயுர்வேதம், ஐ.சி.எம்.ஆர். என அனைத்து மருத்துவ வல்லு நர்களின் ஆலோசனைப்படி, நோய் வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான உணவு, அலோ பதி மருத்துவம் வழங்கப்படுகிறது. ‘ரெம்டெசிவிர்’ வரை சிகிச்சையில் பயன்படுத்தப் படுகின்றன. ஏற்கெ னவே உள்ள மருந்துகள், வென்டி லேட்டர்கள் உள் ளிட்டவை பயன் படுத்தப்படுகின்றன. 11 வகையான சிகிச்சை முறைகள் செயல்படுத் தப்படுகின்றன. கொரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். மனநல ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன. 56 % மக்கள் குணம டைந்து வீடு திரும்பியுள்ளனர். 1.28% தான் இறப்பு விகிதம். ஒருவர் இறந் தாலும் இறப்புதான்.
அதனை நியாயப் படுத்தவில்லை. ஆனால், தொற்று வந்தவுடன் தற்கொலை செய்வது, ஓடிச்செல்வது கூடாது. தொற்று வந்தவர்களை வசிக்கும் பகுதிகளில் புறக்கணிக்கக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததா லேயே இது வேகமாகப் பரவுகிறது, மற்றபடி, சளி, காய்ச்சல் போன்று இதுவும் சாதாரணமானதுதான். இதர நோய்களுடன் இது வித்தியாச மானது அல்ல. தடுப்பு மருந்து, சிகிச்சை மருந்து கள் உலக அளவில் நிச்சயம் கண்டு பிடிக்கப்படும். பிளாஸ்மா சிகிச்சைக் கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. சித்த மருத்துவத்திற் கான ஆய்வுகளும் நடைபெற்று வரு கின்றன. இறப்பைத் தவிர்ப்பது தான் முதன்மையான நோக்கம். இறப்பு கள் குறித்தும் ஆய்வுகள் நடைபெறு கின்றன. குணமடைபவர்கள் எப்படி குணமடைகின்றனர் என்பது குறித் தும் ஆய்வு செய்யப்படுகிறது. மருத்துவர்கள், ஊடகவியலா ளர்கள் உள்ளிட்ட முன்களப் பணி யாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கும் மன அழுத்தம் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. யாராக இருந்தாலும் 104 என்ற தொலைபேசி எண்ணை அணுகி ஆசனை பெறலாம். யாரை வேண்டுமானாலும் பரிசோதனை செய்வது சிறந்ததல்ல. நோய்த் தடுப்புப் பகுதியில் உள்ளவர்க ளைப் பரிசோதிக்கிறோம். ஐ.சி. எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறை களின்படி பரிசோதிக்கிறோம்”. இவ்வாறு அவர் கூறினார்.